News

மனித மூளைக்குள் ‘சிப்’ வைக்க கிடைத்தது அனுமதி -அறிவியல் உலகில் மற்றுமொரு சாதனை

எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் சிப் பொருத்துவதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் மனித மூளையில் சிப் பொருத்தி ஆய்வு செய்ய நியூராலிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் என பல நிறுவனங்களை நிறுவி உலகின் பெரும் கோடீஸ்வரராக திகழ்பவர் எலான் மஸ்க். இவரது நியூராலிங்க் ஆய்வு நிறுவனம் மனித மூளையில் சிப் பொருத்துவது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது.

முடக்குவாதம் உள்ளவர்கள், நரம்பு பிரச்சினை, கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் கணனி, மொபைல் உள்ளிட்ட சாதனங்களை தொடாமலே மூளையில் அமைக்கும் சிப்பை கொண்டு இயக்குவதுதான் இந்த மைக்ரோ சிப் ஆராய்ச்சியின் முக்கியமான நோக்கம் என சொல்லப்படுகிறது.

குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் பலவற்றிற்கு இவ்வாறாக இந்த சிப் பொருத்தி ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதில் குரங்கு ஒன்று கைகளால் கணனியை தொடாமலே அதில் மைக்ரோசிப் உதவியுடன் கேம் விளையாடுவதான காணொளியும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்த சிப்பை மனித மூளையில் பொருத்தி ஆராய்ச்சி செய்ய நியூராலிங்க் நிறுவனம் விண்ணப்பித்திருந்த நிலையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் அமைப்பு இதற்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேசமயம் மூளையில் இதுபோன்ற மைக்ரோ சிப் அமைப்பது அந்த நபரை கட்டுப்படுத்தும் முறையையும் எதிர்காலத்தில் கொண்டு வரும் ஆபத்து உள்ளதாக சிலர் பயத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button