சாதனை வென்று கொடுத்த மெஸ்ஸி..! ரொனால்டோவின் சாதனை முறியடிப்பு
மெஸ்ஸியின் கோலினால் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.
Stade de la Meinau மைதானத்தில் நடந்த போட்டியில் PSG அணி, ஸ்ட்ராஸ்பெர்க் (Strasbourg) அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் PSGயின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி 59வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 79வது நிமிடத்தில் எதிரணி வீரர் கெவின் காமெய்ரோ கோல் அடித்தார்.
இதனால் ஆட்டம் சமநிலை ஆனது. அதன் பின்னரான நிமிடங்களில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதன் காரணமாக ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
எனினும் PSG அணி 27 வெற்றிகளுடன் 85 புள்ளிகளை பெற்றதால் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. மெஸ்ஸி அடித்த ஒரு கோல் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியது.
மெஸ்ஸியின் ஸ்ட்ரைக், கைலியின் எம்பாப்பேயின் பாஸில் இருந்து ஒரு சிறந்த ஃபினிஷிங் ஆக அமைந்தது.
இது ஐரோப்பாவின் முதன்மையான ஐந்து லீக்குகளில் மெஸ்ஸியின் 496வது ஸ்ட்ரைக் என்பதால், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (495) சாதனை தகர்ந்தது.
பாரிஸ் செயின்ட்- ஜேர்மைன் வென்ற 11வது லீக் 1 சாம்பியன் பட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.