News
எரிவாயுவிற்கான நாளாந்த கேள்வி தொடர்பில் லிட்ரோ நிறுவனம் கருத்து..!
எரிவாயுவிற்கான நாளாந்த கேள்வி அதிகரித்துள்ளமையால், தினசரி எரிவாயு விநியோகம் 10 ஆயிரம் சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் , தினசரி எரிவாயு விநியோகம் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் சிலிண்டர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க சப்புகஸ்கந்த மாபிம பிரதேசத்தில் புதிய எரிவாயு முனையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த மாதம் 4திகதி 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1005 ரூபாவாலும் , 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 402 ரூபாவாலும் , 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 183 ரூபாவாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.