இலங்கையில் காய்கறிகளின் விலையில் திடீர் அதிகரிப்பு!
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் காய் கறிகளின் விலைகளில் அதிகரிப்பு நிலை காணப்படுவதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பிரகாரம் காய்கறிகளின் மொத்த விலை 40 சத வீதம் வரை அதிகரித்துள்ளமை தெரிய வருகின்றது.
இந் நாட்களில் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு வழங்கப்படும் மரக்கறிகளின் மொத்த விலை அதிகரித்து, மொத்தமாக காய்கறிகளை வாங்கும் வீதமும் குறைவடைந்துள்ளதாக அங்குள்ள மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் படி கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது அதிகமான மரக்கறி வகைகளின் விலைகளில் அதிகரிப்பு காணப்படுவதற்கான காரணம் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையாகும்.
இதனால் பயிர்கள் சேதமடைந்ததன் காரணமாகவே இவ் விலை அதிகரிப்பு ஏற்பட்டதாகவும் இது ஒரு தற்காலிகமான நிலமை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு பச்சை மிளகாய், போஞ்சி, கறி மிளகாய், கரட், வெள்ளரி, வெண்டைக்காய், உருளை கிழங்கு, பூசணி ஆகியவற்றின் விலைகளிலேயே அதிகரிப்பு நிலை காணப்படுவதாக அங்குள்ள தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.