News
பாரியளவில் குறைந்த மரக்கறிகளின் விலை!
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளதாக பொருளாதார நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த மரக்கறிகளின் மொத்த விலை தற்போது கணிசமான அளவில் குறைந்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், காய்கறிகள் விற்பனையும் குறைந்துள்ளதாக, வியாபாரிகள் கூறுகின்றனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெறப்படும் மரக்கறிகள் குறைக்கப்பட்டமை, கொள்வனவுக்கான விற்பனையாளர்களின் எண்ணிக்கை குறைந்தமை, அண்மைய நாட்களில் விலை அதிகரிப்பு, குறைந்த நுகர்வு போன்ற காரணிகளினால் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.