News

சிறுநீரக சிகிச்சை வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு: நோயாளர்கள் சிரமம்

சிறுநீரக சிகிச்சை வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு: நோயாளர்கள் சிரமம் | Drugs In Kidney Disease Hospital

பொலன்னறுவையில் அமைந்துள்ள ரஜரட்டை சிறுநீரக சிகிச்சை வைத்தியசாலையில் மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஜரட்டை சிறுநீரக சிகிச்சை வைத்தியசாலையில் ஏராளமான நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நிலையில், நாளாந்தம் நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், இங்கு செயற்படும் இரத்த மாதிரிகளை தரம் பிரிக்கும் கட்டமைப்பில் முன்னர் ஒரே தடவையில் 100 பேரின் இரத்த மாதிரிகளை பரிசோதிக்க முடிந்த போதிலும், தற்போது 50 பேரின் இரத்த மாதிரிகள் மட்டுமே பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இங்கு வரும் வெளிநோயாளிகளுக்கு போதுமான பரிசோதனை வசதிகள் இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள ஏனைய அரச வைத்தியசாலைக்கு திருப்பி அனுப்பப்படும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன.

அதேபோன்று உள்ளக நோயாளிகள் மாத்திரமன்றி வெளிநோயாளிகளுக்கும் போதுமான மருந்துகள் கிடைக்கப் பெறாத நிலையில் பெருந்தொகைப் பணம் செலவழித்து மருந்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button