News
சடுதியாக வீழ்ச்சியடையும் பாடசாலை உபகரணங்களின் விலைகள்!
கடந்த காலங்களில் அமெரிக்கா டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதால், இலங்கையில் பொருட்களின் விலைகள் ஓரளவு குறைய ஆரம்பித்துள்ளன.
அந்தவகையில், பயிற்சி புத்தகங்கள் மற்றும் காகித பொருட்கள் உட்பட அனைத்து பாடசாலை உபகரணங்களின் விலைகளை 20% முதல் 25% வரை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறை சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முக்கியமான பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, வங்கி வட்டி வீதங்கள் குறைந்துள்ளமை காரணமாக இந்த பொருட்களின் விலை அடுத்த மாதத்தில் 35% முதல் 40% வரை மேலும் குறையலாம் என அந்த சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.