இலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் முக்கிய நாடுகள்
இலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களை சில நாடுகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்தும் இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பில் பயண அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
எரிபொருள், மருந்துப்பொருள் தட்டுப்பாடு, சிவில் குழப்ப நிலைமைகள் மற்றும் பயங்கரவாத பிரச்சினைகள் போன்ற பிரச்சினை காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொருளாதார நிலைமைகளினால் நாட்டில் எந்த நேரத்திலும் போராட்டங்கள் வெடிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களை கலைப்பதற்கு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு ஊடகங்களின் செய்தி அறிக்கைகளின் அடிப்படையில் பயணங்களைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டடுள்ளது.
அவுஸ்திரேலியா கடந்த ஆண்டு நவம்பர் மாதமும், அமெரிக்கா கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதமும் பயண எச்சரிக்கையை விடுத்திருந்த நிலையில், பயண எச்சரிக்கைகள் இன்று வரையில் தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.