திடீரென விலை குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள்!
லங்கா சதொச நிறுவனம் இன்று(15) முதல், மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விலை குறைப்பு இன்று(15) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு, 195 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பின் விலை, 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, 295 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் கடலை பருப்பின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு, 275 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.