News

ஜனவரியில் மின் கட்டணத்தில் நிவாரணம்!

அடுத்த வருடம் ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

” சிரமங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். மின்சாரக் கட்டணம் அதிகம். எரிபொருளின் விலை அதிகம். ஜனவரி 1 ஆம் திகதி மின்சாரத் திருத்தத்திற்கான முன்மொழிவை நவம்பரில் தாருங்கள் என்று நான் சொல்கிறேன். இப்போது ஜூலையில் மேற்கொள்ளும் திருத்தத்தின் ஊடாக சில அளவில் குறையும். 0 – 30, 30 – 60, 60 – 90 வரையான குறைந்த பட்ச மின்சார அலகுகளை பயன்படுத்தும் குழுவிற்கு 27% மின் கட்டணத்தை குறைக்க முன்மொழிந்துள்ளோம். ஜனவரியில் இந்த திட்டத்தை கொண்டு வந்து மின் கட்டணத்திற்கு உறுதியான நிவாரணம் வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

இதேவேளை, நாட்டில் 95 ஒக்டேன் பெற்றோல் உள்ளிட்ட ஏனைய பெற்றோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக பல வகையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான பெற்றோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், வழங்கப்பட்ட அனைத்து ஓடர்களையும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button