News

கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதி – சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்

கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரின் சுயவிபரங்கள் சேகரிப்பு தொடர்பில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய மாற்றம் ஒன்றைச் செய்துள்ளது.

கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போர், தங்கள் கைரேகைகள் மற்றும் தங்கள் முகத்தைக் காட்டும் புகைப்படம் ஆகியவற்றை, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

அவற்றை சமர்ப்பிப்பதற்கான கட்டணம் 85 கனேடிய டொலர்கள் ஆகும். ஜூன் 14 முதற்கொண்டு, நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போர், தங்கள் கைரேகைகள் மற்றும் தங்கள் முகத்தைக் காட்டும் புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.

ஏற்கனவே அவர்கள் தற்காலிக குடியிருப்பு அனுமதிக்காக விவரங்களை சமர்ப்பித்திருந்தாலும், மீண்டும் அவர்கள் அவற்றை சமர்ப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவிட் காலகட்டத்திற்காக மட்டும், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்த விவரங்களை மீண்டும் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு நிலை உருவாகியிருந்தது.

இப்போது கோவிட் காலகட்டம் முடிந்துவிட்டதால், கோவிட் காலகட்டத்திற்கு முன் நடந்ததுபோலவே, நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போர் தங்கள் கைரேகைகள் மற்றும் தங்கள் முகத்தைக் காட்டும் புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும் என கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button