News

இலங்கையுடன் மேற்கு ஆசிய நாடுகள் விரிசல்: அமைச்சர் தெரிவித்த முக்கிய காரணம்

முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்ட விவகாரம் காரணமாகவே மேற்கு ஆசிய நாடுகளுடன் விரிசல் நிலை ஏற்பட்டது என வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, கோவிட் பெருந்தொற்று காலத்தில் முஸ்லிம் ஒருவர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்த ஒவ்வொரு இரவும் தமக்கு நித்திரையற்ற இரவாகக் கழிந்தது.

இவ்வாறு கோவிட் காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்கள் தகனம் செய்யப்பட்ட விவகாரம் மேற்கு ஆசிய நாடுகளுடனான உறவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த சமயத்தில் ஒரு முஸ்லிம் அமைச்சர் என்ற வகையில் இந்த பிரச்சினை என்னை வெகுவாக பாதித்தது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களுக்கு அமைய கோவிட் காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கி இருந்தது.

எனினும் நிபுணர் குழு என அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு தரப்பினர் கோவிட் காரணமாக உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய மறுத்து அவற்றைத் தகனம் செய்ய வேண்டுமென வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button