இந்த மாதம் நடைமுறைக்கு வந்த வர்த்தமானி! வெளியிடப்பட்டுள்ள விபரங்கள்
இந்த மாதம் நடைமுறைக்கு வந்த வர்த்தமானி அறிவிப்பைத் தொடர்ந்து, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மருத்துவர்கள், கணக்காளர்கள், பொறியியலாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் பிறரின் தொழில்முறை அமைப்புகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது.
அத்துடன் ஏற்கனவே இவர்கள் தமது வரிக் கோப்புகளை திறக்காவிட்டால், வரிக் கோப்புகளைத் திறக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் இவர்கள் ‘தனிப்பட்ட குடியிருப்பாளர்கள்’ என வகையில் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இதன்படி, இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்யப்பட்ட தொழில்முறை பயிற்சியாளர்கள், இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகம், இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனம், இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனம், நிபுணத்துவ வங்கியாளர்கள் சங்கம், இலங்கை அளவையியலாளர்கள், மற்றும் உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் போன்றோர் டின் என்ற வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று இறைவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு வருவாய்ச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட மே 31 வர்த்தமானியின் அடிப்படையில் இந்த மாதம் 100,000 ரூபாய் அல்லது வருடத்திற்கு எந்தவொரு சேவையையும் வழங்குவதற்கு 1.2 மில்லியன் வருமானத்தை கொண்டவர்கள், வரிக் கோப்புகளைத் திறப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தொழில்முறை அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, பிரதேச செயலகங்களில் தமது வியாபாரத்தை பதிவு செய்தவர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை டின் எண்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.