News
		
	
	
மற்றுமொரு கட்டணமும் உயர்ந்தது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான உரிமம் புதுப்பித்தல் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு உரிமம் புதுப்பித்தலுக்கும் 100,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
முன்பு இந்த கட்டணம் ரூ.50,000 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




