கனடாவில் வேலைவாய்ப்பு – பல ஆயிரம் பேருக்கு கிடைத்த அதிஷ்டம்…!
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணி புரிவதற்கு அந்நாட்டு அரசு எச்.1.பி விசாவை வழங்கி வருகிறது.
இந்த விசா நடைமுறை மூலம் ஏராளனமான இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த காலங்களில் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவால் பல நிறுவனங்கள் அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவின் அயல் நாடான கனடா எச்.1.பி விசா தொடர்பாக இந்தியர்களுக்கு சாதகமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், அமெரிக்க அரசு வழங்கும் எச்.1.பி விசாவை கொண்டுள்ள 10,000 பேர் கனடாவிற்கு வந்து பணிபுரிய முடியும். இதற்கான அனுமதியை வழங்குவதாக அந்நாட்டு அமைச்சர் ஷான் ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூலை 16 ஆம் திகதி முதல் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும், எச்.1.பி விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் கனடாவில் பணிபுரியலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் நேரடி குடும்ப உறுப்பினர்களும் வேலை அல்லது கல்வி நிமித்தமாக அவர்களுடன் தங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் பலர் எச்.1.பி விசா வைத்திருக்கும் நிலையில் அமெரிக்காவில் வாய்ப்பு கிடைக்காதவர்களும், கனடாவில் சிறந்த வாய்ப்பை பெறுபவர்களும் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.