News

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

2023ஆம் ஆண்டுக்கான  கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல், நேற்று முதல் இணையத்தள முறைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்தோ அல்லது திணைக்களத்தின் கைபேசி செயலியைப் பயன்படுத்தியோ, விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலதிக தகவல்களை, 1911 என்ற துரித அழைப்பு இலக்கத்திற்கு அல்லது 011 2784 208,  011 2784 537,  011 2786 616 முதலான இலக்கங்களுக்கு தொடர்புகொண்டும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் என கல்வி அமைச்சு நேற்றைய தினம் அறிவித்தது.

அத்துடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட சாதாரண தர பரீட்சை 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் எனவும்  கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button