News

பயணத்திற்கு தயாராகும் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்…!

‘ஐகான் ஒப் த சீஸ்’ (Icon of the Seas) என பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலானது அடுத்த வருடம் ஜனவரி முதல் முறையாக பெருங்கடலில் அதன் பயணத்தை ஆரம்பிக்க உள்ளது.

அண்மையில் இந்த கப்பல் துர்கு மற்றும் பின்லாந்து பெருங்கடலில் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றிப் கண்டுள்ளது.

முதல் பயணத்தை அடுத்த வருடம் ஆரம்பிக்க உள்ள இந்த அசுர கப்பலிற்கு மேயர் துர்கு சிப்யார்டில் ஒரு சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அறிக்கைகளின் படி, உலகின் மிகப்பெரிய இந்த கப்பல் அடுத்த வருடம் ஜனவரி 27 அன்று கிழக்கு மற்றும் மேற்கு கரீபியன் பெருங்கடலில் முதன் முதலாக புறப்படும்.

மியாமியில் இருந்து அதன் சேவைகள் தொடங்கும். இதுவரை கட்டப்பட்டுள்ள கப்பல்களில் ஐகான் ஒப் த சீஸ் கப்பல் மிகப்பெரியது என்று கூறப்படுகிறது.

இந்த கப்பலானது 1,200 அடி (365 மீட்டர்) நீளத்தையும், 250,800 தொன்கள் எடையும் கொண்டது. அடுத்த வருடம் ஆரம்பிக்கவுள்ள அதன் முதல் கடல் பயணத்தின் போது ஐகான் ஒப் த சீஸ் கப்பல் 2,350 க்கு நபர்களையும், 5,610 பயணிகளையும் ஏற்றிச்செல்லும்.

இது அதன் உண்மையான கொள்ளளவை காட்டிலும் குறைவான எண்ணிக்கை ஆகும் என்று கருத்துக்கள் வெளியாகின்றன. இந்த கப்பலில் மொத்தமாக 7,960 பயணிகள் பயணம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

மிகப்பெரியதாகவும் அதிக எடை கொண்டதாகவும் இருப்பதை தவிர 20 டெகுகள் கொண்ட இந்த கப்பலில் நீர் வசதிகள், நவீன நீச்சல்குளம், கண்காணிப்பு பகுதி, திரையரங்குகள், நீச்சல் தடாகம், மதுபானசாலை உட்பட ஏராளனமான சொகுசு வசதிகளை கொண்டுள்ளது.

இப்படியாக பல அம்சங்களை கொண்ட இந்த கப்பலில் பயணிப்பதற்கு ஒரு நபருக்கு 1,703 டொலரில் இருந்து பணம் அறவிடப்படவுள்ளது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button