News

100ஆவது டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த அவுஸ்திரேலிய வீரர்

தனது 100-வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலியா அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்று 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டம் செய்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனை படைத்துள்ளார்.

அவர் தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறார். 100வது டெஸ்டில் ஸ்மித் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இரண்டு இன்னிங்ஸிலும் அதிர்ச்சிதான் காத்திருந்தது.

காரணம் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் 5 பிடியெடுப்புகளை பிடித்து அசத்தியுள்ளார். விக்கெட் காப்பாளர் அல்லாத ஒருவர் ஒருவர் 5 பிடியெடுப்புகளை எடுப்பது அசாத்தியமான சாதனையாகும்.

இதற்குமுன் ரிச்சர்ட்சன். அசாரூதின், ஸ்ரீகாந்த், பென் ஸ்டோக்ஸ் என பலரும் 5 கேட்சுகளை பிடித்திருந்தாலும் ஸ்மித் மட்டுமே இரண்டு முறை ஒரே இன்னிங்ஸில் 5 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button