News
		
	
	
உயர்தர பரீட்சை பெறுபேறு – கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

2022 மற்றும் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான தகவலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வருடம் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.




