தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் – வர்த்தமானியில் பிரசுரம்
சிறிலங்காவில் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது ஒரு தேர்தல் மனுவை முன்வைப்பதற்கான காலப்பகுதியை நீடிப்பதற்காகவும், குற்றத்திற்கான அபராத தொகையை அதிகரிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்குமாக இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளைச் சட்டம், 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டம், 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய வர்த்தமானி முன்மொழிவதாகக் குறிப்பிடப்படுகின்றது..