அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அரச மருத்துவமனைகளில் உள்ள மொத்த சிடி ஸ்கேனர் இயந்திரங்களில் மூன்றில் ஒரு பங்கு முற்றிலும் செயலிழந்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த தகவலை அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் அரச மருத்துவமனைகளில் மொத்தம் 44 சிடி ஸ்கேன் இயந்திரங்கள் காணப்படுகின்றன.
அதன்படி, கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 12 சிடி ஸ்கேன் இயந்திரங்களும், ஏனையவை குருநாகல், கராப்பிட்டிய, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, ஹொரணை, தேசிய பல் வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலை மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளிலும் காணப்படுகின்றன.
இதில் சில இயந்திரங்கள் பல மாதங்களாக செயல்படவில்லை எனவும் மொத்தத்தில், தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாத ஏழை மக்களே இந்தப் பிரச்சினையை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த இரண்டு வருடங்களாக சுகாதார அமைச்சுக்கு போதிய நிதி வழங்கப்படாததால் இந்த இயந்திரங்களை புனரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.