சிறிலங்காவின் ஆதரவை வரவேற்றுள்ள பிரித்தானியா
மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு செயல்முறையுடன் சிறிலங்காவின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை பிரித்தானியா வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது அமர்வில் சிறிலங்காவிற்கான உலகளாவிய காலமுறை மீளாய்வுக்கான அறிக்கையை வெளியிட்டு பிரித்தானியா இதனைத் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கில் அரசாங்கத் திணைக்களங்களால் நில அபகரிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான கவலைகள் தொடர்பான தனது பரிந்துரைக்கு சிறிலங்காவின் ஆதரவையும் பிரித்தானியா வரவேற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளில் சிறிலங்கா எதிர்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது.
அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முக்கியத்தும், ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தையும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நீதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கும் சிறிலங்காவுடன் ஆக்கபூர்வமாகச் செயற்படுவதாகவும் பிரித்தானியா மேலும் தெரிவித்துள்ளது.