News
		
	
	
கலை பிரிவு கற்ற பெண்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

தாதியர் ஆட்சேர்ப்பின் போது கலைப் பிரிவு படித்தவர்களையும் தாதியர் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளும் வகையில் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக பயிற்சி பெற்ற தாதியர்கள் அதிகமானோரை சேவையில் இணைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் விளக்கமளித்து இருந்தார்.
சுகாதார அதிகாரிகளுடன் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.




