பிரமிட் திட்டம் தொடர்பில் முறைப்பாடு: ஆறு பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்
பிரமிட் திட்டம் என நம்பப்படும் தனியார் நிறுவனமான ‘ONMAX DT’ இன் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஆறுபேரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய அடையாளம் காணப்பட்ட ஆறு பேரின் வங்கிக் கணக்குகள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளின் வைப்பு தொகை 790 மில்லியன் ரூபாய் உள்ளடங்கிய 95 கணக்குகள் இதுவரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த நிறுவனம் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது .
இந்நிலையில் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட மொத்த தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றாலும், இடைநிறுத்தப்பட்ட கணக்குகளில் கிடைத்த பணத்தை விட குறைந்தது இருபது மடங்கு அதிகமாக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் நம்புவதாகவும் இருப்பினும் குறித்த பிரமிட் திட்டத்திற்கு எதிராக இதுவரை பொதுமக்களிடமிருந்து எதுவித முறைபாடுகளும் வரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.