News
		
	
	
பசிபிக் பெருங்கடலில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

எல் சால்வடாரில் பசிபிக் பெருங்கடல் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இந்நிலநடுக்கம் மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நிலநடுக்கத்தின் தாக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேசமயம், கடந்த 16 ஆம் திகதியும் அலாஸ்கா மாநிலத்தின் தெற்கு பகுதியில் இருந்து சுமார் 106 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.




