News

பிரித்தானியா செல்ல புதிய நடைமுறை!

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, 2024 முதல் ஒரு புதிய விதிமுறை ஒன்று நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், இனி முன்போல் அந்த நாடுகளுக்குள் எளிதாக நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது.

அதாவது, 2024 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், The European Travel Information and Authorisation System (ETIAS) என்னும் பயண அனுமதி ஒன்றை பெறவேண்டும்.

இந்த அனுமதி ஆவணத்திற்கான கட்டணம், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 6 பவுண்டுகள் ஆகும்.
இந்த அனுமதி பெறாதவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button