News
இலங்கையின் எரிபொருள் துறையில் நுழையும் புதிய நிறுவனங்கள்
இலங்கையில் எரிபொருள் அனுமதி அட்டை முறைமை ஊடாக வழங்கப்படும் எரிபொருள் அளவில் 60 வீதத்தை மாத்திரமே மக்கள் பயன்படுத்துவதாக மின்சக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.
எரிபொருள் துறையில் புதிய நிறுவனங்கள் நுழைவதன் மூலம், எரிபொருள் அனுமதி அட்டை அமைப்பில் மாற்றங்கள் வரலாம் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
புதிய நிறுவனங்கள் சந்தைக்கு வரும்போது, உள்ளூர் நிறுவனங்கள் மாதந்தோறும் ஈட்டக்கூடிய அந்நியச் செலாவணியின் அளவு குறையும் என்றும் அவர் கூறினார்.
இதன்காரணமாக, எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படலாம் அல்லது எரிபொருள் அனுமதி அட்டை முறை நீக்கப்படலாம் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.