நட்டஈட்டை செலுத்துமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உத்தரவு
14 மில்லியன் டொலர் நட்டஈட்டை செலுத்துமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் உள்ள பெடரல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த உத்தரவில், மெட்டா நிறுவனம் தொடர்பான நட்டஈட்டை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பயனாளர்களுக்கு உரிய முறையில் அறிவுறுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட்போன் செயலி மூலம் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் சரியான அறிவுறுத்தல்கள் இன்றி சேகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து மெட்டா நிறுவனத்திற்கு எதிராக அவுஸ்திரேலியாவின் நுகர்வோர் ஆணையத்தால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இந்த செயலி 271,000 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.