புதிய முறைமை அறிமுகம்! தகுதியானவர்களுக்கு கொடுப்பனவுகள் – வெளியானது அறிவிப்பு
அரசியல்வாதிகள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் தேவைகளுக்கு இணங்க நிவாரணங்களை வழங்கிய முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வரும் போது பணம் படைத்த தரப்பினரே, இதற்கு எதிராக செயற்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு அரசியல் கட்சிகளினதும் அல்லது நபர்களினதும் விருப்பத்திற்கு ஏற்பவே கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் இந்த முறைமையை நாம் முற்றாக நீக்கியுள்ளோம். 25 வருடங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த முறைமையை மாற்றி புதிய முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இதில் குறைபாடுகள் இல்லாமலில்லை. எனினும் அந்த குறைபாடுகளை நீக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதுமாத்திரமின்றி நலன்புரி கொடுப்பனவுகள் கிடைக்க வேண்டிய தகுதியானவர்களுக்கு இதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சமுர்த்தி திட்டத்தை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் ஒரு போதும் நடவடிக்கை எடுக்காது.
சமுர்த்தி திட்டமானது வறுமை நிலையிலிருந்து மக்களை மீட்பதற்கான விரவிான செயற்திட்டமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.