விவசாயிகளுக்கான இழப்பீடு அதிகரிப்பு
வறட்சியினால் நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதங்களின் நிலையை மதிப்பிடும் பணியை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, கமநல மற்றும் விவசாய காப்புறுதிச் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் வடமத்திய மாகாண விவசாயப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் அமைச்சரால், அந்த சபையின் தலைவர் டபிள்யூ.எம்.எம்.பி. வீரசேகர உள்ளிட்டவர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பயிர் சேதத்திற்கான இழப்பீடாக ஹெக்டேயருக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கினாலும் போதாது என்பதால் அதனை அதிகரிக்க வேண்டும் அமைச்சர் மஹிந்த அமரவீர அங்கு வலியுறுத்தினார்.
கடந்த வருடம் பயிர் சேதத்திற்காக 1.7 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருடம் அது அதிகரிக்கலாம் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.