தரம் குறைந்த பட்டப்படிப்புக்களை வழங்கும் 81 கல்வி நிறுவனங்கள் இடைநிறுத்தம்
இலங்கையில் தரம் குறைவான பட்டப்படிப்புகளை வழங்கும் சுமார் 81 கல்வி நிறுவனங்கள் இதுவரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் நிலைக் கல்விக்கான உப குழுக்கூட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவிப்புகள் மூலம் அத்தகைய நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுவதற்கு முறையான பொறிமுறையை உருவாக்குவதற்கு துணைக் குழு பரிந்துரைத்துள்ளது.
அதுமாத்திரமல்லாமல் குறித்த கல்வி நிறுவனங்களைத் தடை செய்வதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போலியான தேசிய தொழில் தகைமை சான்றிதழ்களை (NVQ) வழங்கும் கல்வி நிறுவங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியிருந்தது.
சான்றிதழின் QR குறியீட்டின் மூலம் போலி சான்றிதழ்களை அடையாளம் கண்டு உரிய முறையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அந்தக் குழு தெரிவித்தது.