News
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துவிட்டார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார் எனவும், விரைவில் மொட்டுக் கட்சியினருடனும் சந்திப்பு நடத்தவுள்ளார் எனவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்தி அதில் அரசுக்குப் பின்னடைவு ஏற்பட்டால் அது ஜனாதிபதி தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்தும் என்பதால் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அதன் பின்னரே மாகாண சபைத் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பன இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.