News
வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் அதிவிசேட வர்த்தமானி
வெகுஜன ஊடகத்துறை அமைச்சினால் வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிநாட்டு அல்லது உள்ளூர் திரைப்படங்கள், மேடை நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் அல்லது பொது நிகழ்ச்சிகள் சட்டத்தின் கீழ் பொதுக் கண்காட்சிக்கான உரிமம் பெறுவதற்கு தற்போதுள்ள கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக அவ்வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திருத்தமானது, வெகுஜன ஊடகத்துறை அமைச்சரினால் வெள்ளிக்கிழமை(11) வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.