News

அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பான விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (14.08.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.88 ரூபாவாகவும், கொள்வனவு விலை 313.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 244.42 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 359.12 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 341.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 415.58 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 396.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button