News
		
	
	
வவுனியாவில் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வவுனியா தெற்கு வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்ற மாணவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
மைதானத்திற்கு அருகிலிருந்த ஆழமான நீர் நிறைந்த கிடங்கில் பாடசாலை மாணவர்கள் இருவரும் தவறி வீழ்ந்துள்ளனர்.
வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த 14 , 15 வயதுடைய தரம் 09 மற்றும் 10 இல் கல்வி கற்கும் மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



