News

மக்கள் தொகையை கணக்கெடுப்பதற்கு நடைமுறையாகும் புதிய திட்டம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம், தமது 150 ஆண்டுகளின் முதன்முறையாக, 15ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2023-2024க்கான தரவு சேகரிப்புக்காக, பாரம்பரிய அச்சிடப்பட்ட ஆவணங்களுடன் டிஜிட்டல் டெப்லெட் கணினிகளைப் பயன்படுத்த உள்ளது.

இதன்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் பட்டியல் கட்டம், இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆரம்பமாகும். அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு கணக்கெடுப்பு கட்டம் ஆரம்பமாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் நாட்டில் உள்ள அனைத்து தனிநபர்கள் மற்றும் தற்போதுள்ள குடியிருப்புகளின் விரிவான எண்ணிக்கையைப் பதிவிடும் செயற்பாடாகும்.

இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக, சுமார் 16,000 கணக்கெடுப்பாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள், அவர்கள் அனைவரும் பொதுத்துறை ஊழியர்களாக இருப்பார்கள்.

பட்டியலிடப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி ஏற்கனவே பிரதேச செயலக அலுவலகங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 31 ஆண்டுகளுக்குப் பின்னர், நாடு முழுவதும் கடந்த 2012ஆம் ஆண்டு 14ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அந்த நேரத்தில், நாட்டின் மொத்த மக்கள் தொகை 20,359,439 ஆக இருந்தது, இது 1871ஆம் ஆண்டிலிருந்த மக்கள் தொகையின் எட்டு மடங்கு அதிகம் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button