உலகத்திற்கு எலான் மஸ்க் விடுத்துள்ள எச்சரிக்கை
உலக நாடுகள் எதிர்பாராத முக்கியமான ஒரு ஆபத்தை சந்திக்கவுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் உலகின் செல்வந்தர்களின் ஒருவருமான எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருவதுடன், வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது.
உலகின் வெப்பநிலையானது, அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் நாம் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.நா. அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.
அத்துடன் கோவிட் போன்ற வைரஸ்கள் காரணமாக உலகத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அண்மையில் கூட கோவிட்டின் புதிய வகை வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை உலக சுகாதார மையம் ஆரம்பித்தது.
இந்த நிலையில் உலக நாடுகளுக்கு எதிர்பார்க்காத முக்கியமான ஒரு ஆபத்து ஏற்பட்டு உள்ளது அதன்படி மக்கள்தொகை சரிவுதான் மனித நாகரிகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.