News

கிரிக்கெட் பிரபலம் புற்றுநோயால் மரணம்!

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்ட்ரீக்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், தனது 49 வயதில் நேற்று (22) மரணம் அடைந்தார்.

1990 முதல் 2000 ஆம் வரை பிளவர் சகோதரர்கள் விளையாடிய காலத்தில் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர்.

சிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட், 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4933 ஓட்டங்களை பெற்றத்துடன், 455 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்ட்ரீக், பல்வேறு அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.

பங்களாதேஸ், சிம்பாப்வே சர்வதேச அணிகளுக்கும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

சிம்பாப்வே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஹீத் ஸ்ட்ரீக் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button