ரஷ்யா – உக்ரைன் மோதலை தீவிரப்படுத்தும் நேட்டோ அமைப்பு !
ரஷ்யா – உக்ரைன் மோதலை நேட்டோ அமைப்பு தொடர்ந்து தூண்டிவிட்டு வருவதாக அதன் உறுப்பு நாடுகளில் ஒன்றான ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது.
இதன் காரணமாக ஜெர்மனி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் போர்களை நேட்டோ நடத்தி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதன்போது போர் வேண்டாம், அமைதியே வேண்டும், ஆயுதங்கள் அமைதியை தராது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் பேரணி சென்றுள்ளனர்.
லிபியா, ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளை ஆக்கிரமித்து நேட்டோ போர் நடத்தியதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பி அந்நாட்டுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக கூறிய அவர்கள், உக்ரைனுக்கு ஆயுத உதவி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பொருளாதார பாதிப்பு, பணவீக்கம் என ஜெர்மனி பிரச்சனைகள் உள்ள நிலையில், உக்ரைனுக்கு ஜெர்மனி ஆயுத உதவி வழங்கி வருவதை போராட்டக்காரர்கள் கடுமையாக விமர்சித்தனர்.