News

இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள புதிய தீர்மானம்

உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

அடுத்து வருகின்ற சில ஆண்டுகால பகுதியில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டதை போன்று குறைந்தபட்ச முதலீட்டு ஆதாயம் வழங்கப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்ட நடைமுறைப்படுத்தலின் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கத்திற்கு எதிராக ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களின் பிரதிநிதிகள் என கூறப்படும் குழுவொன்றினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்தது.

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று(28.08.2023) இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்,இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகை மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி கலந்துரையாடுவதற்காக சந்திப்பொன்றை கொழும்பு கோட்டை பொலிஸாரினூடாக கோரியுள்ளனர்.

இதனையடுத்து ஐந்து பேருடன் இலங்கை மத்திய வங்கியின் வளாகத்தில் கலந்துரையாடுவதற்காக நேற்றைய தினமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், கூட்டம் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அந்த கூட்டத்தில் பங்குபற்றுவதற்கான அவர்களது இயலாமை பற்றி எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தினூடாக இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளனர்.

ஆகையால் உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகையை நடைமுறைப்படுத்துவதனூடாக உறுப்பினர் பங்களிப்புகளுக்கு உத்தரவாதமளிக்கப்படவுள்ள முறை தொடர்பான தெளிவினை அவர்கள் பெற தவறியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button