News
பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட 100 மில்லியன் டொலரை திருப்பி செலுத்தியது இலங்கை
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேசிடம் இருந்து பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர்களில் 100 மில்லியன் டொலர்களை இலங்கை நேற்று திருப்பி செலுத்தியுள்ளதாக பங்களாதேஷ் வங்கியின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தவணை திருப்பிச் செலுத்தலுடன் இலங்கை, பங்களாதேஷிற்கு மொத்தம் 150 மில்லியனைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாக மத்திய வங்கியின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் செப்டெம்பருக்குள் மீதமுள்ள 50 மில்லியன் டொலர்களும் திருப்பிச் செலுத்தப்படும் என்று நம்புவதாக பங்களாதேஷ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அதனை மீள செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது.
எனினும், இருவேறு சந்தர்ப்பங்களில் கடனை செலுத்துவதற்கான அவகாசம் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.