வடமாகாணத்திலிலுள்ள கைப்பணியாளர்களுக்கான அரிய வாய்ப்பு.! தேசிய கைப்பணிப் போட்டி – “ஷில்ப அபிமானி” 2023
நாடளாவிய ரீதியில் பரந்து இருக்கின்ற கைப்பணியாளர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் வழிகாட்டுதலுடன் தேசிய அருங்கலைகள் பேரவையால் நடாத்தப்படும் தேசிய கைப்பணிப் போட்டி மற்றும் ஜனாதிபதி விருது வழங்கல் விழா 2023 இம்முறையும் நடாத்தப்படவுள்ளது.
மாகாண மட்டத்திலான போட்டிகள் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் நவம்பர் மாதம் 15,16ம் திகதிகளில் நடாத்தப்படவுள்ளது.
போட்டியில் பங்குபற்ற ஆர்வமுள்ள கைப்பணியாளர்கள் விண்ணப்பப் படிவங்களை மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள வடமாகாணத் தொழிற்துறைத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவையின் உத்தியோகத்தர்கள் ஊடாக பெற்று போட்டிக்கு விண்ணப்பிக்க முடியும்.
போட்டிக்குரிய ஆக்கங்களை நவம்பர் மாதம் முதலாம் வாரம் பிரதேச செயலகங்களில் ஒப்படைப்பதற்கு தயாராக இருத்தல் வேண்டும்.
முன்வைக்கக்கூடிய கைப்பணி ஆக்கங்கள்..!
களிமண் சார்ந்த ஆக்கங்கள்,
தும்பு, ஓலை, புல் சார்ந்த ஆக்கங்கள்,
பிரம்பு, மூங்கில்; சார்ந்த ஆக்கங்கள்,
உலோகக் கைப்பணி ஆக்கங்கள் (வார்ப்பு, செதுக்கல்),
கைத்தறி நெசவு சார்ந்த ஆக்கங்கள்,
சங்கீத உபகரணங்கள் ஆபரணங்கள்,
துணிகளினாலான ஆக்கங்கள் (பச்வேர்க்,எம்ரொய்டர்) பற்றிக், ரேந்தை
போன்ற துறைகளில் உங்கள் படைப்புக்களை சமர்ப்பிக்க முடியும். இதிலிருந்து மாகாண மட்டத்தில் தெரிவு செய்து தேசிய மட்டம் வரை சென்று பெறுமதிமிக்க பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பனவற்றை பெற்றுக்கொள்வதுடன் சிறந்த கைப்பணியாளர் என்ற அடையாளம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
இன்றே தொடர்பு கொள்ளுங்கள்…!!!
தேசிய அருங்கலைகள் பேரவை,
மாவட்ட செயலகம்,
யாழ்ப்பாணம் – 0212216156, வவுனியா 0776302065, மன்னார் 0776034349, கிளிநொச்சி 0778031703, முல்லைத்தீவு 0775736423
மாகாணக் காரியாலயம் மாவட்டச் செயலகம்,
யாழ்ப்பாணம்.
0212216156 / 0773520735 / 0772145325 / 0776034349