திடீரென அதிகரித்த டொலரின் பெறுமதி – இன்றைய நாணயமாற்று விகிதம்
நேற்றைய தினத்துடன் (04) ஒப்பிடுகையில் இன்றைய தினமும்(05) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 312.39 ரூபாயிலிருந்து 313.37 ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 327.07 ரூபாயிலிருந்து 328.09 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 312.26 ரூபாயிலிருந்து 313.23 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை , விற்பனைப் பெறுமதி 324.50 ரூபாயாக மாறாமலுள்ளது.
சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 314 ரூபாயிலிருந்து 315 ரூபாய் மற்றும் 325 ரூபாயிலிருந்து 326 ரூபாய் ஆக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபா 33 சதம் – விற்பனை பெறுமதி 326 ரூபா 93 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 399 ரூபா 85 சதம் – விற்பனை பெறுமதி 417 ரூபா 48 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபா 63 சதம் – விற்பனை பெறுமதி 358 ரூபா 92 சதம்.
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 14 சதம் – விற்பனை பெறுமதி 243 ரூபா 03 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 87 சதம் – விற்பனை பெறுமதி 214 ரூபா 03 சதம் சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 09 சதம் – விற்பனை பெறுமதி 243 ரூபா 61 சதம்