News

அதிரடியாக லாப் எரிவாயு விலையும் அதிகரிப்பு..!!!

லிட்ரோ சமையல் எரிவாயு விலை, நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் லாப் எரிவாயுவின் விலையையும் இன்று முதல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு கொள்கலனின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 3,835 ரூபாவாகும்.

இதேவேளை, 5 கிலோ கிராம் லாப் எரிவாயு கொள்கலனின் விலை 59 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1,535 ரூபாவாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button