News

இலங்கையில் மூடப்படும் நிறுவனம்: 1000 பேர் வேலை இழக்கும் அபாயம்

மினுவாங்கொடையில் அமைந்துள்ள Brandix  நிறுவனத்திற்குச் சொந்தமான Brandix Incubator தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிறுவனம் மூடப்படுவதால் சுமார் 1000 பேர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிர்வாக உத்தியோகத்தர், இதற்கு முன்னர் Brandix  நிறுவனத்திற்குச் சொந்தமான கஹவத்தை மற்றும் வெலிசறையில் அமைந்துள்ள தொழிற்சாலைகளையும் மூடியுள்ளார்.

ஆடைத் தொழில் அடிக்கடி வீழ்ச்சியடைந்து வருவதாகவும், குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் பெரும் வேலை இழப்பு ஏற்படும் என்றும் Brandix குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்ரப் உமர் சமீபத்தில் ஊடகங்களுக்கு அறிவித்ததாக தொழில்துறை வட்டாரங்களில் இருந்து தககவல்கள் வெளியாகியுள்ளது.

ஆடை உற்பத்திக்கு கோரிக்கை இல்லாமை, அமெரிக்க பொருளாதார நெருக்கடி, சிறிலங்காவின் நிதி நெருக்கடியினால் டொலரில் நிலையற்ற தன்மை காணப்படுகின்றமை போன்ற காரணங்களால் இலங்கையின் ஆடைத்தொழிற்சாலைகளை முகாமையாளர்கள் மூடுவது வழக்கமாக நடைபெறும் விடயமாகிவிட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button