இரண்டு ரயில் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு!
கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், தேவை ஏற்பட்டால் ஏனைய நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று (13) காலை சுமார் 40 அலுவலக ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
கொழும்பு கோட்டைக்கு 15 காலை ரயில் பயணங்களும், புத்தளம் மார்க்கத்தில் இருந்து கொழும்புக்கு காலை 04 ரயில் பயணங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
களனிவெளியில் இருந்து கொழும்பு கோட்டை வரை 4 ரயில் பயணங்களும், கரையோரப் பாதையில் 17 ரயில் பயணங்களும் திட்டமிடப்பட்டுள்ளன..
அலுவலகத்திற்கு செல்லும் பயணிகளுக்காக தூர மாகாணங்களில் இருந்து கொழும்பு கோட்டைக்கு இரவு நேர அஞ்சல் ரயிலை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.