News
ஈஸ்டர் தாக்குதலால் மைத்திரிக்கு ஏற்பட்ட சங்கடநிலை
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர் என தன்மீது பல்வேறு தரப்பினரால் 04 வருடங்களாக குற்றஞ்சாட்டப்பட்டதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் இது தொடர்பாக கூறுகையில், “சனல் 4 ஆவணம் பற்றிய கடிதத்தின் வேலைகள் இன்று நிறைவடையும். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதி வந்துள்ளார்.
எனவே, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிந்துரைப்படி நாட்டில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறோம்.
பல்வேறு தரப்பினரால் 04 வருடங்களாக எனக்கு அனைத்து இன்னல்களையும் கொடுத்தார்கள். எனக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பும் வழங்கப்பட்டது. இப்போது நீங்கள் சனல் 4ஐ பார்க்கும்போது, எல்லாமே வித்தியாசமாக தெரியும்.” என்றார்.