SLPP மற்றும் UNP அடுத்த தேர்தலில் கூட்டணி!
மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை அடுத்த தேர்தலுக்கு முன்னதாக ஒரு பாரிய கூட்டணியை அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான பேச்சுக்கள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு பெரும்பான்மை ஒருமித்த கருத்து உள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்றாலும், அடுத்த தேர்தலில் இரு தரப்பினரும் வெற்றிபெற ஒரே வழி கூட்டணியில் இணைந்து செயல்படுவது தான் என்பதில் இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த கூட்டணியில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்கனவே ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் விக்கிரமசிங்க போட்டியிடும் நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச என்ன பங்கு வகிக்கிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கருத்துக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.