மக்களுக்கு அதிர்ச்சி தகவல்: அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்த தீர்மானம்
மூன்று வருடங்களுக்குள் அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்தில் பயனடையும் நபர்களை வலுப்படுத்துவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனைக்கமைய புதிய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய, சமுர்த்தி பிளஸ் (SAMURDHI PLUS) வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களை பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக பதில் அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் ஓகஸ்ட் மாத கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.