News
பெட்ரோல் , டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை : ரஷ்யா அறிவிப்பு
பெட்ரோல், டீசல் ஆகியவற்றினை ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பொருட்களிற்கான விலை ஏற்றத்தினை குறைப்பதற்காக இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதன் காரணமாக ரஷ்யாவில் உள்நாட்டில் எரிபொருளின் விலை 4 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.